மகளிர் தின விழா
பரமக்குடி யாதவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
பரமக்குடி,
பரமக்குடி யாதவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மலேசியா பாண்டியன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் அழகர்சாமி வரவேற்றார். பள்ளியின் முதல்வர் வீரலட்சுமி உள்பட ஆசிரியைகள் கேக் வெட்டி மகளிர் தின விழா கொண்டாடினர். சங்க பொருளாளர் கண்ணன், துணைத்தலைவர் தென்னவனூர் சந்திரன், துணைச்செயலாளர் செல்லக்காரி, இணைச் செயலாளர் சம்பத், கவுரவ ஆலோசகர் சங்கர் ராஜ் ஆகியோர் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினர். இதில் செயற்குழு உறுப்பினர்கள் அழ.வெள்ளைச்சாமி, முத்துச்சாமி, முருகேசன், சேகர், சந்திரசேகரன், ஹரிகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் வீரலட்சுமி ஏற்புரையாற்றினார். அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பூமாதேவி நன்றி கூறினார்.