கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் தின விழா


கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் தின விழா
x

தாமலேரிமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் தின விழா நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே தாமலேரிமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பாதிவாளர் சி.பெ.முருகேசன் தலைமை தாங்கினார்.

இதில் பாலின சமத்துவத்திற்கான புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் சென்னைம்மாள், துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் சித்திரா, முதுநிலை ஆய்வாளர்கள் லோகேஸ்வரி, கோகிலா ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டினர்.

மேலும் மகளிர் முன்னேற்றம் குறித்து இணைப்பதிவாளர் முருகேசன், துணைப்பதிவாளர் பாலசுப்பிரமணியன், கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் தர்மேந்திரன், சார்பதிவாளர் சாதசிவம், முதுநிலை ஆய்வாளர் திப்புதிலீபன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

கருத்தரங்கில் சங்க பணியாளர்கள், மகளிர்பணியாளர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மகளிர் பணியாளர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

முடிவில் தாமலேரிமுத்தூர் சங்க செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.


Next Story