மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் ; தாசில்தார் ஆய்வு
தஞ்சாவூர்
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம், ராஜகிரி, பண்டாரவடை, சரபோஜிராஜபுரம், ரகுநாதபுரம், சக்கராப்பள்ளி, சூலமங்கலம், மாகாளிபுரம் ஆகிய பகுதிகளில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்து கொண்டனர். முகாமை தாசில்தார் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story