பெண்கள் பால்குட ஊர்வலம்


பெண்கள் பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பெண்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள காளிசண்டி கோவிலில் வராகி அம்மனுக்கு ஆசாட நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று காலையில் செண்பககவல்லி அம்மன் கோவில் முன்பிருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உற்சவர் மேளதாளம் முழங்க வலம் வந்தார். ரதத்தை பின்தொடர்ந்து ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்தும், ஆண்கள் அக்னி சட்டி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் எட்டயபுரம் ரோடு, மந்தித்தோப்பு ரோடு வழியாக கோவிலை சென்றடைந்தது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.


Next Story