தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு மாணவிகளின் கவியரங்கம்

தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு மாணவிகளின் கவியரங்கம்
x

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளியில் தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு மாணவிகளின் கவியரங்கம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளியில் தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு மாணவிகளின் கவியரங்கம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் உள்ளிட்டவை இணைந்து தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் "வாழ்க்கை ஒரு விளையாட்டு" எனும் தலைப்பில் கவியரங்கம் நடத்தியது. தலைமை ஆசிரிைய ஜோதிலட்சுமி வரவேற்றார். மாணவி நந்திதா நடுவராக இருந்தார். கவியரங்கை டாக்டர் சுபாலக்ஷ்மி தொடங்கிவைத்தார். இதில் மாணவிகள் திவ்யா, சந்தியா, ரிஷியை, பவித்ரா, நர்மதா, விஷ்ணுபிரியா, ஹரிதேவி ஆகியோர் கவிபாடினர். கவியரங்கத்தில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நூலகர்கள் சாயிராம், வெங்கடேசன், வாசகர் வட்டத் தலைவர் வாசுதேவன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் நேதாஜி நன்றி கூறினார்.

Next Story