காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்


காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்
x

பழனி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட புதுஆயக்குடியை சேர்ந்த பெண்கள் சிலர், பழனி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு நேற்று காலிக்குடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், அலுவலகம் முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது பகுதியில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என்றும், இதுகுறித்து கேட்டால் கவுன்சிலரின் உறவினர் தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புது ஆயக்குடி பகுதியில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளிடம் பரிந்துரை செய்யப்படும் என்றும், தரக்குறைவாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story