மிளகாய் வத்தல் அறுவடை பணி தீவிரம்


மிளகாய் வத்தல் அறுவடை பணி தீவிரம்
x

மிளகாய் வத்தல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

மிளகாய் வத்தல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மிளகாய் வத்தல் சாகுபடி

வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி, விஜய கரிசல்குளம், தாயில்பட்டி, சுப்பிரமணியபுரம், மடத்துப்பட்டி, கண்டியாபுரம், பனையடிப்பட்டி, சிப்பிப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிளகாய் வத்தல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மிளகாய் வத்தல் கிலோ ரூ.150 ஆக இருந்தது. தற்போது கிலோ ரூ.200-க்கு விற்பனை ஆகிறது.

ஒரு குவிண்டாலுக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து விஜயகரிசல்குளம் விவசாயி கணேசன் கூறியதாவது:-

மிளகாய் வத்தலுக்கு சந்தையில் அதிக தேவை உள்ளது. அதேபோல மிளகாய் வத்தல் சென்ற ஆண்டு 100 சதவீத விளைச்சல் கிடைத்தது. ஆதலால் இந்த ஆண்டும் மிளகாய் வத்தல் பயிரிட்டு பராமரித்து வந்தோம். ஆனால் இந்த ஆண்டு கடுமையான பனிப்பொழிவு காரணமாக 25 சதவீத விளைச்சல் குறைந்துள்ளது. தற்போது அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு ஏக்கருக்கு 5 முதல் 10 குவிண்டால் வரை மகசூல் கிடைத்துள்ளது. ஒரு ஏக்கருக்கு கூலி உள்பட ரூ. 60 ஆயிரம் செலவாகி உள்ளது. இருப்பினும் தற்போது மேலும் விலை உயர வாய்ப்புள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story