புதிய தூக்கு பாலத்திற்கான உபகரணங்கள் கொண்டு செல்ல கிரேன் அமைக்கும் பணி தீவிரம்


புதிய தூக்கு பாலத்திற்கான உபகரணங்கள் கொண்டு செல்ல கிரேன் அமைக்கும் பணி தீவிரம்
x

பாம்பன் கடலுக்குள் நடைபெற்று வரும் புதிய ரெயில் பாலத்தின் மையப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தூக்குபாலத்திற்கான உபகரணங்கள் கொண்டு செல்ல வசதியாக ராட்சத கிரேன் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பாம்பன் கடலுக்குள் நடைபெற்று வரும் புதிய ரெயில் பாலத்தின் மையப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தூக்குபாலத்திற்கான உபகரணங்கள் கொண்டு செல்ல வசதியாக ராட்சத கிரேன் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாம்பன் புதிய ரெயில் பாலம்

ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. அது போல் 105 ஆண்டுகள் கடந்து மிகவும் பழமையான பாலம் ஆகிவிட்டதால் அருகிலேயே சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள வடக்கு கடல் பகுதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணியானது கடந்த 2ஆண்டுகளுக்கு மேலாகவே நடைபெற்று வருகின்றது..மேலும் மண்டபத்திலிருந்து பாம்பன் தூக்கு பாலம் வரையிலும் தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் அமைக்கும் பணியும் முழுமையாக முடிவடைந்து விட்டன.

கிரேன் அமைக்கும் பணி

புதிய தூக்குப்பாலத்தின் பாகங்கள் அதற்கான உபகரணங்கள் மற்றும் இரும்பு கம்பிகள் கொண்டு செல்வதற்காக பாம்பனில் இருந்து தொடங்கும் புதிய ரெயில் பாலத்தின் தூண்களில் இரும்பு தகடுகள் விரிக்கப்பட்டு ராட்சத கேண்டரி என்று சொல்லக்கூடிய கிரேன் அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. புதிய தூக்குப்பாலம் சத்திரக்குடி ரெயில்வே நிலையம் அருகே உள்ள ரெயில்வே தொழிற்சாலையில் வைத்து வேகமாகவே நடைபெற்று வருகின்றது. தற்போது மழை சீசன் ஆக உள்ளதால் அந்த தூக்கு பாலத்தின் பாகங்கள் கொண்டுவரப்படாமல் உள்ளது. மழை சற்று குறைந்த பின்னர் தூக்கு பாலத்தின் பாகங்கள் பாம்பன் கொண்டுவரப்பட்டு அதன் பின்னர் ரெயில்வே பாலத்தின் நுழைவு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கிரேன் மூலம் மையப் பகுதியில் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள தூண்கள் மீது தூக்கு பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story