தொழுநோய் கணக்கெடுக்கும் பணி தீவிரம்


தொழுநோய் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
x

துத்திப்பட்டு ஊராட்சியில் தொழுநோய் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்தது.

திருப்பத்தூர்

ஆம்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் தொழுநோய் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக துத்திப்பட்டு ஊராட்சியில் அரசு மருத்துவக்குழுவினரால் வீடு, வீடாக சென்று தொழுநோயை கண்டறியும் பணி நடந்து வருகிறது. ஊராட்சிமன்ற தலைவர் சுவிதாகணேஷ், துணைத் தலைவர் விஜய், சுகாதார ஆய்வாளர் ராஜூ, ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.


Next Story