புதிய 3 துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கான பணி


புதிய 3 துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கான பணி
x

புதிய 3 துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கான பணியை காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கரூர்

கரூர் ஊராட்சி ஒன்றியம் ஒத்தக்கடையில் அமைந்துள்ள 110/35 கிலோ வாட் துணை மின் நிலையத்தை ரூ.20.17 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தவும், தென்னிலையில் ரூ‌.16.52 கோடி மதிப்பீட்டில் 110/11 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைப்பதற்காகவும், பவித்திரத்தில் 110/11 கிலோ வாட் துணை மின் நிலையம் ரூ.12.61 கோடி மதிப்பீட்டில் அமைக்கவும், சின்ன பனையூரில் 110/11 கிலோ வாட் துணை மின் நிலையம் ரூ.9 கோடி மதிப்பில் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதனை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று மேற்கண்ட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மின் பகிர்மான தலைமை பொறியாளர் நமச்சிவாயம், மேற்பார்வை பொறியாளர் வேல்முருகன், செயற்பொறியாளர்கள் கணிகை மார்த்தாள், ஹேமலதா, அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story