வேலைவாய்ப்பு முகாமில் 148 பேருக்கு பணி ஆணை
கே.வி.குப்பத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 148 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
வேலூர்
தமிழ்நாடு மாநில ஊரக மகளிர்திட்டம் சார்பில் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ், கே.வி.குப்பம் வட்டார அளவிலான வேலை வாய்ப்பு முகாம், வேலைவாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் திருவிழா நேற்று கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. உதவி மகளிர் திட்ட அலுவலர் கலைச்செல்வன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றினார். வேலைவாய்ப்பு வழங்கும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். கே.வி.குப்பம் ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
முகாமில் 217 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 148 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பிரமிளா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story