தகுதி பெற்ற 345 பேருக்கு பணி ஆணை


தகுதி பெற்ற 345 பேருக்கு பணி ஆணை
x

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தகுதி பெற்ற 345 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

வேலூர்

வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு வாழ்வாதார நகர்ப்புற மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகியவை சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமில் 35-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெற்றன. இந்த நிறுவனங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி ஆகிய கல்வி தகுதியில் தேர்ச்சி பெற்ற 876 நபர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 345 நபர்கள் தேர்வாகினர். தேர்வான நபர்களுக்கான பணி ஆணையை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில் இந்த பணியை மனப்பூர்வமாக ஏற்றுகொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். மேலும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இங்கு நடைபெற்று வருகிறது. வேலை தேடுபவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணியில் சிறந்து விளங்க வேண்டும் என கூறினார்.

நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் பரமேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story