பழங்குடியின மக்கள் 25 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை


பழங்குடியின மக்கள் 25 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை
x

பரவக்கல் கிராமத்தில் பழங்குடியின மக்கள் 25 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது.

வேலூர்

பேரணாம்பட்டு தாலுகா பரவக்கல் கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு (பழங்குடியினர்) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதனையடுத்து முதல் கட்டமாக வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்ட இருளர் இன மக்கள் 25 பேருக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகள் கட்ட பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். அமலு விஜயன் எம்.எல்.ஏ., பேரணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் நல தாசில்தார் சரவணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 25 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன், மண்டல துணை தாசில்தார் பலராமன், பேரணாம்பட்டு ஊராட்சிஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, சொர்ணலதா, பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொகளூர் ஜனார்த்தனன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Next Story