தூக்கில் தொழிலாளி பிணம்
மாரண்டஅள்ளி அருகே தூக்கில் தொழிலாளி மர்மமான முறையில் பிணமாக தொங்கினார். இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் போலீசில் புகார் செய்துள்ளார்.
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே தூக்கில் தொழிலாளி மர்மமான முறையில் பிணமாக தொங்கினார். இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் மாரவாடியை சேர்ந்த நாகராஜ். கூலித்தொழிலாளி. இவரது மகன் முனிரத்தினம். இந்தநிலையில் இவர் ஓசூரில் செங்கல் சூளையில் வேலை செய்த போது ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்தனர். நாகராஜ் அவ்வப்போது மாரவாடி வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர் சிவா என்பவர் முனிரத்தினத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மாரவாடிக்கு சென்று தனது தந்தையின் உடலை பார்த்தார். இதுகுறித்து அவர் மாரண்டஅள்ளி போலீசில் புகார் செய்தார்.
சாவில் சந்தேகம்
அதில் தனது தந்தை சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் கூறி உள்ளார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
நாகராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.