தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் காந்திகிராமம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகன் விக்னேஸ்வரன்(வயது 27). கூலி தொழிலாளியான இவருக்கும், பாத்திமா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட விக்னேஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டுக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.