விஷம் தின்று தொழிலாளி தற்கொலை


விஷம் தின்று தொழிலாளி தற்கொலை
x

கரூர் அருகே விஷம் தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கரூர்

தொழிலாளி

கரூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 34). கூலி தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் பாலசுப்பிரமணி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் அவருக்கு வயிற்று வலி சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாலசுப்பிரமணி விஷ மாத்திரையை தின்று மயங்கி விழுந்தார்.

தற்கொலை

இதைக்கண்ட உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினர் பாலசுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story