விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
நச்சலூர் அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள இனாம் புலியூர் வெள்ளக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சங்கர் (வயது 28). கூலி தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. இந்நிலையில் சங்கருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.இந்நிலையில் கடந்த 7-ந்தேதி சங்கர் மதுகுடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சங்கர் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கிய விழுந்தார்.இதையடுத்து அங்கிருந்தர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சங்கர் பரிதபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story