விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

பண்ருட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள மணலூர் காலனி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் கஸ்பர்(வயது 60), தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கஸ்பர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஸ்பர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story