விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52), கூலி தொழிலாளி. இவர் நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜேந்திரன் கடந்த மே மாதம் 22-ந் தேதி விஷம் குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராஜேந்திரனை அவரது குடும்பத்தினர் மீட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் அழகப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story