விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரியகருப்பு (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி இருவக்காள் (27). இவர் மகளிர் குழுவிற்கு கட்டுவதற்காக வீட்டில் பணம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை பெரியகருப்பு எடுத்து செலவழித்ததை அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த பெரிய கருப்பு திடீரென விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரது குடும்பத்தார் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து இருவக்காள் கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.