மின் வயரை கடித்து தொழிலாளி தற்கொலை


மின் வயரை கடித்து தொழிலாளி தற்கொலை
x

நெய்வேலியில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியால் மின் வயரை கடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்

நெய்வேலி,

கட்டிட தொழிலாளி

நெய்வேலி மந்தாரக்குப்பம் தெற்குவெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வினோத்குமார்(வயது 31). கட்டிட தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சித்ரா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 7 வயதில் மகன் உள்ளான்.

வினோத்குமார் வேலைக்கு சென்று கிடைக்கும் கூலியை மனைவியிடம் கொடுக்காமல் மது அருந்தி வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது.

மின் வயரை கடித்தார்

சம்பவத்தன்றும் இது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே சண்டை நடந்தது. இதனால் சித்ரா அவரது கணவரை கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பே சென்று விட்டார். இதில் மனமுடைந்து காணப்பட்ட வினோத்குமார் வீட்டில் தனியாக இருந்தபோது மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த வயரை வாயில் கடித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் வினோத்குமாரின் மனைவி சித்ராவுக்கு தகவல் தொிவித்தனர். பின்னர் அவர் இது குறித்து மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story