தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கரூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
தொழிலாளி
கரூர் மண்மங்கலம் தாலுகா அப்பிபாளையம் குடித்தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 57). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் தீக்காயம் சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்த பழனிசாமி சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார்.
தற்கொலை
இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தற்கொலை குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story