விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்

தஞ்சாவூர்

ஒரத்தநாடு

ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு அண்ணா காலனியை சேர்ந்த தியாகராஜன் மகன் முருகானந்தம் (வயது39). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாதவி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. குடும்ப பிரச்சினை காரணமாக முருகானந்தம் பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகானந்தம் இறந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.







Next Story