தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
சாத்தான்குளத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் கரையாளன்குடியேற்று தெருவைச் சேர்ந்தவர் சாமி. இவருடைய மகன் சித்திரை செல்வன் (வயது 35). கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சித்திரை செல்வன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி, குழந்தைகளை சிவகாசியில் உள்ள மாமனாரின் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டு வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சித்திரை செல்வன் திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story