தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
திசையன்விளை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை அருகே சிவந்தியாபுரம் வாசகசாலை தெருவை சேர்ந்தவர் கோட்டை முத்து (வயது 46). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் இருந்து யாரிடமும் பேசாமல் வருத்தத்தில் இருந்துள்ளார். பின்னர் மாலையில் வீட்டைவிட்டு வெளியே சென்றவர் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நேற்று காலை அவருக்கு சொந்தமான இடத்தில் விஷம் குடித்து இறந்துகிடந்தார். இதுகுறித்து அவரது மகன் சுடலை, திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story