தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

பாடாலூர்:

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தில் உள்ள குறும்பர் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 40). தொழிலாளி. இவருக்கு அமுதா என்ற மனைவியும், 4 பிள்ளைகளும் உள்ளனர். ரவி கடந்த 1½ ஆண்டுகளாக தனது குடும்பத்தினருடன் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூரில் பெருமாள்பாளையம் ரோட்டில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி ரவிக்கும், அமுதாவிற்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் அமுதா கோபித்துக்கொண்டு பிள்ளைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த ரவி நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story