தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பெரியகுளம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்டார்
தேனி
பெரியகுளம் அருகே உள்ள பங்களாபட்டியை சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு பாண்டியராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமதி கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அண்ணாதுரை தனது தந்தை வேலுச்சாமி மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாடியில் தூங்க செல்வதாக சென்ற அண்ணாதுரையை காணவில்லை. வேலுச்சாமி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள மரத்தில் அண்ணாதுரை தூக்கில் பிணமாக தொங்கினார். இவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story