தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வேலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வேலூர்
வேலூரை அடுத்த பொய்கை கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 32), டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி.
இவருக்கு சோனியா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நித்தியானந்தம் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாகவும், அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சோனியா மருந்து வாங்குவதற்காக அந்த பகுதியில் உள்ள மருந்து கடைக்கு சென்றார்.
சிறிது நேரத்துக்கு பின்னர் அவர் வந்தபோது நித்தியானந்தம் வீட்டின் பூஜை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். சோனியாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் நித்தியானந்தத்தை மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.