தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

ஆறுமுகநேரியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி இலங்காத்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் உதயகுமார் (வயது 22). தொழிலாளி. இவருடைய மனைவி சமுத்திரகலா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். உதயகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலையில் உதயகுமார் வேலைக்கு செல்லாமல் அளவுக்கு அதிகமான குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை சமுத்திரகலா கண்டித்துள்ளார். அப்போது தனக்கு பசி எடுப்பதாக கூறி, தான் சாப்பிட போகிறேன் என்று அவராகவே சமையலறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் வெகுநேரமாகியும் திரும்பாததால் சமுத்திரகலா சமையல் அறையில் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது சமையலறையில் உதயகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அலறியடித்த சமுத்திரகலா மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி போலீசார் உதயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி சமுத்திரகலா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story