தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பழவூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி
வடக்கன்குளம்:
பழவூர் அருகே கண்ணங்குளத்தை சேர்ந்தவர் பால்துரை (வயது 58). கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கண் அறுசை சிகிச்சை செய்துள்ளார். அதனால் தலைவலி இருந்து வந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மனைவி வேலைக்கு சென்றிருந்தபோது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பழவூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story