கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை
அருமனை அருகே கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி
அருமனை:
அருமனை அருகே உள்ள களியல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44), தொழிலாளி. இவருக்கு ஷீபா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மணிகண்டன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவருடைய மனைவி வேலைக்கு சென்றார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணிகண்டன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடையல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story