குடும்ப பிரச்சினையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


குடும்ப பிரச்சினையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

குளித்தலை அருகே குடும்ப பிரச்சினையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

தொழிலாளி விஷம் குடித்தார்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 60). தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் பழனிசாமிக்கும், அவரது மனைவி அம்சவள்ளிக்கும் (52) அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

அதேபோல கடந்த 2-ந்தேதி பழனிசாமி வீட்டுக்கு குடித்து விட்டு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்துக் கொண்ட பழனிசாமி தோட்டத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துள்ளார்.

தற்கொலை

இதுகுறித்து தகவல் அறிந்த அம்சவல்லி மற்றும் உறவினர்கள் பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் பழனிசாமி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story