கந்துவட்டி கொடுமையால் தொழிலாளி தற்கொலை
திருவெண்காடு அருகே கந்துவட்டி கொடுமையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவெண்காடு
அதற்கான வட்டியை அவர் செலுத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணபதி, கார்த்திகேயன், விக்னேஷ் ஆகிய 3 பேரும் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு திட்டியதாக தெரிகிறது.
தற்கொலை
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுந்தரமூர்த்தி நேற்று முன்தினம் நள்ளிரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி கமலி திருவெண்காடு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கந்து வட்டி கேட்டு தனது கணவரை கொடுமைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விசாரணை நடத்தி கந்து வட்டி கேட்டு சுந்தரமூர்த்தியை கொடுமைப்படுத்திய கணபதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
2 பேர் கைது
அவர்களில் கணபதி, கார்த்திகேயன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான விக்னேசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.