கடனை அடைக்க முடியாததால் தொழிலாளி தற்கொலை


கடனை அடைக்க முடியாததால் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே மகளின் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே மகளின் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடன் தொல்லை

மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு கருவஞ்சான்விளையை சேர்ந்தவர் வில்பிரட் சாம் (வயது51). இவர் பரக்குன்றில் உள்ள மரஅறுவை மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு ஓமனா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

மகளை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார். இதற்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடனை திரும்ப கொடுக்க முடியாமல் அவதிபட்டு வந்தார். இதற்கிடையே பணத்தை கொடுத்தவர்கள் அதை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால், வில்பிரட் சாம் மனமுடைந்து காணப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் சம்பவத்தன்று அவரது மனைவி வெளியே சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த வில்பிரட் சாம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கடந்து மனைவி திரும்ப வந்த போது கணவர் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story