கருங்கல் அருகே மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை


கருங்கல் அருகே மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை
x

கருங்கல் அருகே மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

கருங்கல், மே.13-

கருங்கல் அருகே மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி காஞ்சிரங்காட்டுவிளையை சேர்ந்தவர் முருகேசன் (வயது 36), தொழிலாளி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டின் மாடியில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்தார். அதன்பின்பு முருகேசன் வெளிநாடு செல்லவில்லை. மனைவி இறந்த சோகத்தில் காணப்பட்டார்.

இந்தநிலையில் இவரது வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கருங்கல் போலீசுக்கு தகவல் ெகாடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் முருகேசன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த அதே மின்விசிறியில் முருகேசனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story