நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் தொழிலாளி தற்கொலை


நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் தொழிலாளி தற்கொலை
x

குறிஞ்சிப்பாடி அருகே தவணை முறையில் செல்போன் வாங்கியதற்கு பணம் கட்டாததால் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டினர். இதனால் மனமுடைந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

குறிஞ்சிப்பாடி:

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெரிய கண்ணாடி கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 42). தொழிலாளி. இவருடைய மனைவி அறிவழகி. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் குமார், தனியார் நிதி நிறுவனம் மூலம் மாத தவணை முறையில் ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் வாங்கினார். இதில் முதல் 2 தவணைக்கான பணத்தை மட்டுமே அவர் செலுத்தியுள்ளார். மீதமுள்ள தவணை பணத்தை அவர் கட்டகவில்லை.

தற்கொலை

இதனால் அந்த நிதி நிறுவன ஊழியர்கள் கடந்த 3-ந் தேதி குமார் வீட்டிற்கு நேரில் வந்து பணம் கேட்டுள்ளனர். மேலும் 5-ந் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.இதனால் மனமுடைந்த குமார் நேற்று முன்தினம் காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, எனது சாவுக்கு பணம் கேட்டு மிரட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார். இது குறித்து அறிவழகி கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story