முசிறியில் தொழிலாளி தற்கொலை


முசிறியில் தொழிலாளி தற்கொலை
x

முசிறியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்

திருச்சி

முசிறி, ஆக.20-

முசிறியை அடுத்த அரசலூர் சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 39). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் இருசக்கர வாகன மெக்கானிக் பட்டறையில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் பரமசிவம் கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு வீட்டிலே இருந்து உள்ளார். இதை அவரது மனைவி புவனேஸ்வரி கண்டித்துள்ளார். பின்னர் புவனேஸ்வரி 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியே சென்ற பரமசிவம் முசிறி பெரியார் பாலம் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story