திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி
சமயபுரம்:
சிறுகனூர் அருகே உள்ள வடக்கு தழுதாளப்பட்டியை சேர்ந்தவர் அங்கமுத்து. கொத்தனார். இவரது மகன் சசிகுமார்(வயது 30). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதைத்தொடர்ந்து தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தனது பெற்றோரிடம் அவர் கூறி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரது பெற்றோரும், அவருக்கு பெண் பார்த்து வந்தனர். இந்நிலையில் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த அவர் நேற்று அரளி விதையை(விஷம்) அரைத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story