போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் தொழிலாளி தற்கொலை


போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
x

போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்ததாக பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

ராமநாதபுரம்


போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்ததாக பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காந்தி நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 44). தற்போது, ராமநாதபுரம் சுப்பையா நகர் 2-வது தெருவில் வசித்து வந்தார்.

கூலி தொழிலாளியான இவர் நேற்று திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து கேணிக்கரை போலீசார் அவரின் உடலை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உடலை வாங்க மறுப்பு

இந்நிலையில் மது விற்றதாக ஜெயராமனை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியதால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவருடைய உறவினர்கள் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து துணை சூப்பிரண்டு ராஜா, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஜெயராமன் உடலை வாங்க மறுத்துவிட்டனர். சாவு குறித்து நடவடிக்கை எடுத்தால்தான் உடலை வாங்குவோம் என கூறியதால், பரபரப்பு நீடித்தது.


Next Story