நெகமம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
நெகமம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கோயம்புத்தூர்
நெகமம்
நெகமம் அருகே உள்ள ஆவலப்பம்பட்டியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 57) கூலித்தொழிலாளி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி ஒரு கால் எடுக்கப்பட்டது. அன்றிலிருந்து எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட தர்மலிங்கம் தென்னை மரத்திற்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதை கவனித்த உறவினர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தர்மலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story