தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
x

கோவில்பட்டியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த பொன்னுதுரை மகன் கோபிராஜன் (வயது 27). கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோபிராஜன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story