தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
தோகைமலை அருகே உள்ள இடையப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 57). தொழிலாளியான இவர், உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 19-ந்தேதி தனது வீட்டு வாசலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து கொண்டார். இதையடுத்து தீக்காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கண்ணனின் மகன் தாமோதரன் கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story