மோகனூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


மோகனூர் அருகே  விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

மோகனூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நாமக்கல்

மோகனூர்:

நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செங்கோடன் (வயது 43). கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு கவுதம் என்ற மகனும், பிரியதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் மோகனூர் அருகே உள்ள செவிட்டுரங்கன்பட்டி பகுதியில் வசித்து வந்தனர்.

செங்கோடனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து அடமானம் வைத்து மது குடித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த குத்துவிளக்கு ஒன்று காணாமல் போனது. இதுபற்றி மனைவி செங்கோடனிடம் கேட்டுள்ளார். இதனால் குடும்பத்தில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் விரக்தி அடைந்த செங்கோடன் மதுவில் விஷம் கலந்து குடித்து வாந்தி எடுத்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செங்கொடன் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மோகனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story