தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து சாவு


தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து சாவு
x

சேலம் அருகே சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டபோது தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.

சேலம்

சேலம், மே.5-

சேலம் ஜட்ஜ் ரோடு ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் ஜீவா (வயது 30), கூலித்தொழிலாளி. இவர் வீராணத்தை அடுத்த எம்.பாலப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று காலை சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கிணற்றுகள் விழுந்தார். கிணற்றில் தண்ணீர் அதிகளவில் இருந்ததால் அவர் நீரில் மூழ்க தொடங்கினார். இதைக்கண்ட உடன் வேலை பார்த்தவர்கள் சத்தம் போட்டனர். நீச்சல் தெரிந்த சிலர் கிணற்றில் குதித்து அவரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் நீரில் மூழ்கி இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஜீவாவின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story