கல்குவாரியில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
சேந்தமங்கலம் அருகே கல்குவாரியில் தவறி விழுந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்
சேந்தமங்கலம்
திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 40). சேந்தமங்கலம் அருகே உள்ள தண்டிக்கரட்டில் இயங்கி வரும் ஒரு கல்குவாரியில் கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அங்கு அவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று தவறி கல்குவாரியில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு மற்ற தொழிலாளர்கள் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்து போன கந்தசாமிக்கு பரமேஸ்வரி (36) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story