என்எல்சி சுரங்க தீ விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி சாவு
என்எல்சி சுரங்க தீ விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி உயிாிழந்தாா்.
நெய்வேலி,
நெய்வேலி அருகே உள்ள கல்லுக்குழி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகன் செல்வதுரை(வயது 37). இவர் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 1-வது சுரங்க ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 1-ந்தேதி வழக்கம்போல் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென அங்கு மின்கசிவு ஏற்பட்டு மின்சாதனங்கள் வெடித்து சிதறி தீப்பற்றியது. இதில் செல்வதுரை மீதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அங்கிருந்த தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை செல்வதுரை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.