குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு
நெல்லை அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தா பகுதியை சேர்ந்தவர் குருநாதன் (வயது 57). பந்தல் தொழிலாளி. இவர் நெல்லை அருகே தாழையூத்து ராஜவல்லிபுரத்தில் வசித்து வந்தார். இவரின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிர் இழந்தார். இந்தநிலையில் இவர் நேற்று மாலையில் ராஜவல்லிபுரம் பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire