மொபட்டில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
ஆரணியில் மொபட்டில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
ஆரணி
ஆரணி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 45), கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு கீதா என்ற மனைவியும், சுகன்யா, சரண்யா என்ற 2 மகள்களும், நரேஷ் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் முரளி கடந்த 4-ந் தேதி இரவு மலையாம்பட்டு சாலையில் இருந்து நாய்க்கன்பாளையம் வழியாக ஆரணிக்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நிலை தடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் கீதா கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து் விசாரணை நடத்தி வருகிறார்.