மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு


மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு
x

மாடு குறுக்கே பாய்ந்ததால் மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள கலுங்கடியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஞானராஜ் (வயது 47). இவர் கடந்த 6-ந் தேதி நாங்குநேரிக்கு மோட்டார் சைக்கிளில் வரும்போது எதிர்பாராதவிதமாக மாடு ஒன்று ரோட்டில் குறுக்கே பாய்ந்து வந்ததால் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை ஞானராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story