மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
சேலம்
வாழப்பாடி:
ஆத்தூர் அருகே உள்ள சார்வாய்புதூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அய்யம்பெருமாள் (வயது 21). இவர் மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்தார். அய்யம்பெருமாள் நேற்று வாழப்பாடி இந்திராநகரில் மின் கம்பத்தின் மீது ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிச்சைக்காக வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story